
தைவான் விவகாரத்தில் ஜப்பான் தலைவர்கள் தவறான செய்தியை பரப்புகின்றனர் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி குற்றம் சாட்டியுள்ளார். சீனா, அதன் அருகே உள்ள தைவான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஜப்பான் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
இதை தொடர்ந்து, தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பான் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்’ என ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்றும் தைவான் விவகாரத்தில் ஜப்பான் தலைவர்கள் தவறான செய்தியை பரப்புகின்றனர் என்று குற்றம் சாட்டினார். ஜப்பானின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியாக பதிலளிக்கும் என்றும் அந்நாட்டின் ராணுவவாதம் மீண்டும் வலுப்பெறுவதை தடுக்க அனைத்து நாடுகளுக்கும் கடமை உண்டு என்று கூறினார்.
இதை யடுத்து, ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெசுக்கு சீனா கடிதம் எழுதியுள்ளது. இதில், ‘தைவான் விவகாரத்தில் ஜப்பான் ராணுவத் தலையீட்டுக்கு துணிந்தால், அது ஆக்கிரமிப்பாக கருதப்படும் என்று தெரிவித்துள்ளது.



