India vs South Africa : இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.!

Advertisements

இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்தது.

இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 489 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு அதிர்ச்சியை அளித்தது. இதை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சேனுரான் முத்துசாமி 109 ரன்களும் மார்கோ ஜான்சன் 93 ரன்களும் சேர்த்தனர். இதை யடுத்து, பந்து வீச்சில் இந்திய அணியின் தரப்பில் குல்திப் யாதவ் 4 விக்கெட்களும்,பும்ரா,சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனிடையே, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *