ஜெலென்ஸ்கி ஜோ பைடன் ஆகியோர் மீது – டிரம்ப் குற்றச்சாட்டு.!

ரஷ்யாவுடனான போருக்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவுடனான மோதலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், தான் இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஜோ பைடன் நிர்வாகத்தின் போது ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கி மோசம் அடைந்தது என்றார். தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், ஒருபோதும் நடக்கக்கூடாத ஒரு போரை தனது பதவிக்காலத்தில் தான் பெற்றதாகவும் இந்த போர் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தோல்வியாக அமைந்தது என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, உக்ரைனுக்காக நேட்டோவிற்கு கணிசமான அளவு ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது என்றும் அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், மனிதப் பேரழிவில் இழந்த அனைத்து உயிர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *