கோபிசெட்டிபாளையத்தில் வருகின்ற 30 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 174 சட்டமன்ற தொகுதிகளில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையத்தில், வருகிற 30 ஆம் தேதி மாலை நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளாதாக அறிவிக்கப்படடுள்ளது.
இதையடுத்து, கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள போவது குறிப்பிடத்தக்கது.




