
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
அரியலூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், குடியரசுத் துணை தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிச் சார்பில் போட்டியிடும் தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்றப் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவர் தமிழர் என்பதை விட, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்பதால் ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து உலகம் முழுவதுமே ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும் என்பது எல்லாருமே கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நாலாந்தர அரசியல்வாதியைப் போல பேசியுள்ளதாகக் கூறி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.



