இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் வராது.. பாகிஸ்தானின் மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Advertisements

இந்தியா – பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானுடன் எந்த போரும் நடக்காது. ஆனால் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விரைவில் பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள். இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானும் நம் மீது பதில் தாக்குதலை நடத்தும். இதனால் மோதல் வலுத்து போராக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இந்தியா தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும். அணுஆயுதத்தை கையில் எடுப்போம். அணுஆயுதத்தை நாங்கள் வெறும் காட்சி பொருளாக வைக்கவில்லை. இந்தியா தாக்கினால் பதிலுக்கு அணுஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசில் 2021-2022ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன்பாக அவர் இம்ரான் கானின் தனிப்பட்ட ஆலோசகராகவும் செயல்பட்டார். தற்போது லாகூரில் வசித்து வரும் மொயீத் யூசுப் தனியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக மொயீத் யூசுப் கூறியதாவது: “இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க இன்னும் வழி பிறக்கவில்லை. இதுதான் முதன்மையான பிரச்சனையாக உள்ளது. நெருக்கடி காலக்கட்டத்தில் இருநாடுகளும் மூன்றாம் நபரை நம்பி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *