
உலக சந்தையில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு டாலர் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில்,பிரிக்ஸ் நாடுகள் இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. டாலருக்கு மாற்றாக கோல்டு ஸ்டேபிள்காயின்களை பயன்படுத்த பிரிக்ஸ் நாடுகள் முயன்று வருகின்றன.பிரிக்ஸ் நாடுகளிலும் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடைக்கிறது . ஆதலால் தான் அமெரிக்காவும் இதை தடுக்க முயற்சிக்கிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் பணவீக்கம், பணமதிப்பு நீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கிரிப்டோ நிபுணரும், எல் சால்வடார் அரசு ஆலோசகருமான மேக்ஸ் கெய்சர் கூறியிருக்கிறார்.
தற்போது வரை பல நாடுகளில் அமெரிக்க பங்குச்சந்தையை பயன்படுத்திதான் தங்கத்தின் வரி நிர்ணயிக்கப்படுகிறது. . பிரிக்ஸ் நாடுகளுக்கு நடுவில் கோல்டு ஸ்டேபிள்காயின் வெற்றிகரமாக இருக்கும்.இந்த மாற்றத்திற்கு காரணம் டாலர்தான். உலகமே டாலரில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சவுதி பெட்ரோலை விற்கிறது. அந்த நாட்டின் கரன்சியான சவுதி ரியாலில்தானே இதை விற்க வேண்டும்? ஆனால் அவர்கள் அமெரிக்க டாலரில் விற்கிறார்கள். எனவே நாம் முதலில் டாலரை வாங்கி, அதை வைத்து பெட்ரோலை வாங்க வேண்டும். ஆஸ்திரிரேலியா நமக்கு கணிம வளங்களை சப்ளை செய்கிறது. அதுவும் டாலரில்தான் விற்பனை செய்கிறது. இப்படி எங்கு பார்த்தாலும் டாலர் மயம்தான்.
ஆக இதற்கு மாற்றாக மற்றொரு க்ரிப்டோ கரன்சியை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் பேசி வருகின்றன. இதற்கான முன்முயற்சியை பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு தற்போது முன்னெடுத்திருக்கிறது.இந்த முயற்சி தற்போது அமேரிக்காவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டும் இருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு தற்போது 11 உறுப்பு நாடுகள் 6 பார்வையாளர் நாடுகள் என விரிவடைந்திருக்கிறது. இந்த நாடுகள் டாலரை தவிர்த்து வருகின்றன.அதன் தொடர்ச்சியாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு பொதுவான கரன்சியை உருவாக்கவும் முயன்றது, இந்நிலையில் தற்போது பல அமைப்பினர் இது இந்தியாவிற்கு பயனுள்ளதாக இருக்கும் தெரிவித்திருக்கின்றனர் .
இந்த நடைமுறையை பிரிக்ஸ் கொண்டுவந்தால் பிரிக்ஸ் நாடுகள் மீது கூடுதல் வரியை போடுவோம் என அமெரிக்கா அச்சுறுத்தியது. இந்த அச்சுறுத்தல் காரணமாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி கரன்சி திட்டம் தள்ளி போடப்பட்டு வருகிறது. ஆக பிரிக்ஸ் கரன்சி மற்றும் டாலர் என இரண்டுக்கும் மாற்றாகத்தான் கோல்டு ஸ்டேபிள்காயினை உருவாக்க பிரிக்ஸ் திட்டமிட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என மேக்ஸ் கெய்சர் கூறியிருக்கிறார்.


