
தென்கொரியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் தீக்காயமடைந்துள்ளனர்.
தென்கொரியாவின் தென்கிழக்கு மண்டலத்தில் இதுவரை இல்லா வகையில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீப் பற்றி எரிகிறது.
கோடையில் நிலவும் கடும் வெப்பம், மளமளவென வீசும் காற்று ஆகியவற்றின் காரணமாகத் தீ பல்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தத் தீயில் உய்சியாங் நகரில் 1300 ஆண்டுகள் பழைமையான கவுன்சா கோவில் முழுவதும் எரிந்து சாம்பலானது. அதற்கு முன் அங்கிருந்த நினைவுச் சின்னங்களும் புனிதப் பொருட்களும் அகற்றப்பட்டுப் பாதுகாப்பான வேறிடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 17ஆயிரம் எக்டேர் பரப்பில் காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்தத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீக்கிரையான பகுதிகளில் இருந்து 23ஆயிரம் பேர் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான வேறிடங்களுக்குச் சென்றுள்ளனர்.
——————————
