இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்.!!

Advertisements

இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி  மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இந்தப், போட்டியில்  கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இதில், ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.]

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *