ஆளுநர் உரை தேவையில்லை என முதல்வர் பேச்சு..!

Advertisements

சட்டசபையில் ஆளுநர் உரை தேவையில்லை என சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கோருவோம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தி;ல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை என கோருவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும். அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், தி.மு.க.அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது என்றும், அரசியலமைப்பிற்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல், மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை  தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அவரது இன்றைய செயல்பாடு, அதனை மெய்ப்பித்துள்ளது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *