Lionel Messi: எட்டாவது முறையாக உயரிய விருதான பகன் டி’ஓர் விருதை வென்றுள்ளார்!

8வது முறையாக பலோன் டி’ஓர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி.

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது வாழ்நாளில் எட்டாவது முறையாக உயரிய விருதான பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார்.

பலோன் டி’ஓர்  (Ballon d’Or 2023) என்பது கால்பந்தாட்டத்தில் மிகவும் மதிப்புமிக்க விருதாகும். மேலும், தேசிய அணி வீரர்களின் சிறந்த செயல்பாட்டிற்காக ஆண்டுதோறும் ஃபிபா-வால் வழங்கப்படும். இந்தநிலையில், இந்த ஆண்டுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) வீரர்கள், வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர்.  இந்த விருத்துக்கான போட்டி பட்டியலில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே மற்றும் நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்தநிலையில், இண்டர் மியாமி உரிமையாளரும், கால்பந்து ஜாம்பவானுமான டேவிட் பெக்காம் மெஸ்ஸிக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். அர்ஜெண்டினாவுக்காக ஃபிபா உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி, இதற்கு முன்பு 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார்.

இந்த விருதை அதிக முறை வென்ற வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். இவருக்கு பிறகு இந்த விருதை அதிகம் வென்றவர் பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த விருதை இவர் 5 முறை வென்றுள்ளார்.

விருதை பெற்றதற்கு பிறகு பேசிய மெஸ்ஸி, “ அர்ஜெண்டினா அணியுடன் இணைந்து நாங்கள் சாதித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருது வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் அர்ஜெண்டினா மக்கள் அனைவருக்குமான பரிசு இது!” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *