
லெபனானில் இஸ்ரேல் இராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனான் நாட்டின் தெற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த, தாக்குதல் குறித்து, லெபனான் இராணுவம், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கானக் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே அமெரிக்கா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தைக், கண்காணிக்கும் குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.



