தோல்வியை தழுவிய இந்தியா- அயர்லாந்து அணி அதிரடி வெற்றி!

Advertisements
இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஹாரி டெக்டர் 53 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், அயர்லாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *