Advertisements

16 ஆவது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஜிம்பாபேவில் 16 ஆவது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், தோல்வியே சந்திக்காத இவ்விரு அணிகளும் சந்திக்கும் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, 5 முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, இன்றைய இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று 6 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
Advertisements



