Advertisements

மீண்டும் முழுமையான போரைத் தொடங்கினால் ஈரான் என்ற நாடே இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஈரானுக்குக் கடும் மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். அதில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறுவதன் மூலம் ஈரான் எப்போதுமே பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்று தெரிவித்தார்.
ஒருவேளை, தாங்கள் நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, மீண்டும் ஒரு முழுமையான போரைத் தொடங்க அமெரிக்கா நிர்ப்பந்திக்கப்பட்டால், அதன் பிறகு உலகில் ‘ஈரான் இஸ்லாமியக் குடியரசு’ என்ற நாடே இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
Advertisements



