
மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். மனதை உடைக்கும் பேரழிவு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் தேசம் துணை நிற்கிறது.
ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது; வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனதை நொறுக்கிவிட்டது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன்.இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
