இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு பிரம்மாண்ட வெற்றி!

Advertisements
முதல் ஒருநாள் தொடர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில், அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ரன்களும், லியம் தாஸ்சன் 68 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 80 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களும், அக்சர் பட்டேல் 57 ரன்களும் எடுத்து அசத்தினர். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *