சிஎஸ்கே அணியில் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு வாய்ப்பு.. தீபக் ஹூடாவுக்கு இடமில்லை..!

ஐபிஎல் தொடர் இந்தியா முழுக்க பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கின்றது. சிஎஸ்கே அணி விளையாடிய 9 போட்டிகளில் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.இந்த சூழலில் எஞ்சி இருக்கும் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே தற்போது அதிகபட்சமாக 14 புள்ளிகளை தான் பெற முடியும்.

ஆனால் ஏற்கனவே ஆர்சிபி அணி 10 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதேபோன்று மும்பை குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ, கொல்கத்தா ஆகிய அணிகளும் அதிகப் புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதனால் சிஎஸ்கே வின் வாய்ப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவினால், தொடரை விட்டு வெளியேறும் முதல் அணியாக கருதப்படும்.

ஏற்கனவே பிரேவிஸ் மற்றும் ஆயுஷ் மாத்ரே என இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர். இதனால் அவருக்கு எஞ்சி இருக்கும் ஐந்து போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணியில் இருந்த தீபக் ஹூடா அதிரடியாக நீக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *