ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்..!

ஓமன் நாட்டின் கசாப் பகுதிக்கு வடக்கே, ஹார்முஸ் ஜலசந்தியில் 25 இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மீது, ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில், இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாக, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓமன் நாட்டின் கசாப் பகுதிக்கு வடக்கே ஹார்முஸ் ஜலசந்தியில் 24 இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற பனாமா நாட்டின் தாரா கேஸ் என்ற எல்பிஜி டேங்கர் கப்பல் மீது, ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 25 மாலுமிகளும் எந்தக் காயமுமின்றி பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.

மாலுமிகள் 25 பேரில், 24 பேர் இந்தியர்கள். ஏவுகணைத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டு கப்பல் செயலிழந்துள்ளது.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கப்பல் மேலாண்மை நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *