
நாம் தமிழர் கட்சியிலிருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பிலிருந்து சுகுமார் விலகுவதாகத் தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியிலிருந்து விலகினார்.

நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் எனச் சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாகப் பூபாலன் கூறியிருந்தார்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2 மாவட்ட பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


