
அதிபராக பதவியேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து வருகிறார் . இதனை சமாளிக்க இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதிகபட்சமாக சீனாவுக்கு 245 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் அமெரிக்கா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நம் நாட்டுக்கு 26 சதவீத வரியை விதித்துள்ளது. தற்போது அமெரிக்காவை எடுத்து கொண்டால் உலகின் பெரும் வல்லரசு நாடாக உள்ளது.
பெரும்பாலான நாடுகளுக்கு இந்த கூடுதல் வரி என்பது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் செயல்பாட்டால் பல நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன. இப்படியான சூழலில் தான் தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர பல நாடுகள் சேர ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை ரஷ்யாவின் எக்ஸ்பர்ட் ஒருவரும் உறுதி செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு வளர உள்ளதாக பெண் எக்ஸ்பர்ட் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் 10 நாடுகள் உள்ளன. இன்னும் பல நாடுகள் இணையலாம். குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் வாய்ப்புள்ளது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைக்குள் வர உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது வேகமாக வளர்ந்து வருகிறது” இதற்கு முக்கிய காரணம் என்பது சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதில் பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வருவது பற்றி ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பிரிக்ஸ் கரன்சி வந்துவிட்டால் பலநாடுகள் அதனை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம். இதனால் அமெரிக்கா டாலரின் பயன்பாடு சரியும். மதிப்பும் உலகளவில் குறையும். இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை பிரிக்ஸ் கரன்சி உருவாகாவிட்டால் வர்த்தகம் செய்யும் இருநாடுகள் இடையே அதற்கான கரன்சி மூலம் வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் அமெரிக்காவுக்கு சிக்கலை தரும்.இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17 வது உச்சி மாநாடு என்பது ஜுலை மாதம் 7 மற்றும் மொ் தேதிகளில் பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ நகரில் நடைபெற உள்ளது.


