தமிழ்நாட்டில் சாதி, மத வெறிக்கு இடமில்லை – முதலமைச்சர்!

Advertisements

சென்னை எழும்பூர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்குக் கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கரை வணங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையைத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

* அண்ணல் அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது என்று சொன்னார் தந்தை பெரியார்.

* இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியைக் கொண்டு வந்தது திமுக.

* சென்னை சட்ட பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியவர் கலைஞர்.

* சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கு பாடுபடும் அரசு திமுக அரசு.

* சென்னை பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியவர் கலைஞர்.

* அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகக் கொண்டாட உத்தரவிட்டது திமுக அரசு.

* நாட்டிலேயே முதன்முதலாக அண்ணல் அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியைக் கொண்டு வந்தது திமுக.

* கடந்த 3 ஆண்டில் பட்டியலின மக்களுக்கு அதிக திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம்.

* ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார உயர் நிலையை அடைய அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

* பழங்குடியின கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.250 கோடியில் திட்டம்.

* பழங்குடியினர் மகளிர் மேம்பாட்டிற்காக அனைத்து கிராமங்களிலும் மகளிர் சுய உதவி குழுக்கள்.

* திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.

* அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரும் என்று கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *