Udhay vs EPS – “உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு”

Advertisements

சென்னை:

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை பற்றி அவதூறாகப் பேச உதயநிதிக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

சனாதனம் தொடர்பாக உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் தன்னை விமர்சித்து இருந்ததாக இபிஎஸ் மனுவில் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க இபிஎஸ் சனாதனத்தை ஆதரிப்பதாக உதயநிதி அறிக்கையில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *