Advertisements

சுதந்திரம் தந்தது யார்? நள்ளிரவில் ஏன் சுதந்திரம்? முதலில் ரேடியோவில் சொன்னது யார்?
Video here👇
இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தது யார்? எதற்காக நள்ளிரவில் சுதந்திரம் தரப்பட்டது? சுதந்திர தினத்தை மகாத்மா காந்தி புறக்கணித்தது ஏன்? சுதந்திரம் பெற்ற ஆண்டு இந்தியா எப்படி இருந்தது? முதன் முதலாக வானொலியில் சுதந்திர தினத்தை இந்தியா முழுக்க அறிவித்தது யார்? என ஏராளமான கேள்விகளுக்கு விரிவான விடை சொல்கிறது உங்கள் ஜெம் தொலைக்காட்சி
வெற்றிகரமான 79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை இந்தியர்கள் கொண்டாடும் ஆனந்த திருநாள் இது. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த சுதந்திரம் நமக்கு கிடைத்தது என்பது கால வரலாறு.இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியவர் அப்பொழுது இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த வரும் இந்தியாவுக்கான கவர்னர் ஜெனரலாக இருந்தவருமான மவுண்ட் பேட்டன் பிரபு என்பார்கள். உண்மையில் இந்தியாவுக்கான சுதந்திரத்தை அறிவித்தது அப்பொழுது பிரிட்டனில் பிரதமராக இருந்த கிளமெண்ட் அட்லி என்பவர்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர் வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரிட்டனைச் சேர்ந்த பல தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும் பிரிட்டனின் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைகிறது என்றும் அறிவித்தவர். கால வரலாறு அவரை மறைத்து விட்டது. இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான் இலங்கை மியான்மர் போன்ற பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்த நாடுகளும் கிளமெண்ட் அட்லி யின் உத்தரவாலாதான் விடுதலை பெற்றன.

இந்தியாவுக்கான சுதந்திரத்தை 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என பிரிட்டிஷ் பாராளுமன்றம் அறிவித்த நிலையில் கலவரங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முன்னதாகவே திடீரென ஒரு தேதியை மவுன்ட் பேட்டன் பிரபு தீர்மானம் செய்தார். இதனால் இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக அறிவிப்பதற்கு ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர்க்குள் ஒரு தேதியை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு இருந்தார்
அவர் இந்தியா சுதந்திரம் அடையும் நாள் ஒரு முக்கிய நாளாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.அவரது எண்ணபடி இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளிடம் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஜப்பான் சரணடைந்தது அந்த நாளை நினைவு கூறும் வகையில்தான் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை சுதந்திர நாளாக மவுண்ட்பேட்டன் பிரபு தேர்ந்தெடுத்தார் அன்றைய தினம் பகல் 11 மணி அளவில் சுதந்திர தினத்தை அறிவிக்க முடிவு செய்யப்பட்டு இரந்தது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை உகந்த நாளாக இல்லை அது ஒரு துரதிஷ்டமான நாளாகும் என உஜ்ஜெயினியைச் சேர்ந்த ஜோதிடர்கள் ஹர்தியோஜி மற்றும் சூரிய நரைன் வியாஸ் ஆகியோர் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் தகவல் சொன்னார்கள்.அந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் ஆகஸ்டு 15ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு சுதந்திர தினம் அறிவிக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி புதிய பிரதமர் நேரு தலைமையில் நாடாளுமன்ற கூடியது. இந்த கூட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையினர் ஒன்று கூடினர் இரவு 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது.

அப்போது அவர் ஆற்றிய உரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது அவர் பேசும் பொழுது உலகமே தூங்கும் நள்ளிரவு நேரத்தில் இந்தியா வாழ்க்கைக்கும் சுதந்திரத்திற்கும் விழித்தெழும் எனப் பேசினார்.பிரதமர் நேருவின் உரையை தொடர்ந்து இந்தியா முழுவதும் நள்ளிரவில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை இந்திய மக்கள் அனைவரும் வானொலி மூலம் கேட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் இந்த செய்தியை ரேடியோ மூலமாக சொன்னவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம் பெரும் நடிகர் பூரணம் விஸ்வநாதன்.திருநெல்வேலி சேர்ந்த பூரணம் விஸ்வநாதன்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை புதுடெல்லிஅகில இந்திய வானொலியில் வாசித்தவர். முன்னதாக அவரது அண்ணன் பூரணம் ராமச்சந்திரன் சென்னை அகில இந்திய வானொலியில் வேலை செய்து கொண்டிருந்தார் அவரது உதவியால் தனது 24 வது வயதில் டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பூரணம் விஸ்வநாதன் பணியாற்ற தொடங்கினார்
பின்னாளில் இவர் உயர்ந்த மனிதன் மௌன ராகம் வருஷம் 16 தில்லு முல்லு மகாநதி என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் தற்போதைய தலைவர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் தான் இவர் கடைசியாக நடித்த படம்.கடந்த 2008 ஆம் ஆண்டு மறைந்த பூர்ணம் விஸ்வநாதன்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அந்த மகிழ்ச்சியான செய்தியை ஆனந்த கண்ணீரோடு ஆல் இந்தியா ரேடியோ வானொலி மூலமாக முதன் முதலில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தவர் என்பது ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தியாகும்.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி அன்று நடைபெற்ற அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் தான் இந்தியாவின் தற்போதைய தேசிய கொடியின் வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது முக்கிய செய்தியாகும்
தற்போதைய இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா என்பவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி இவர் .இதற்கு முன்னதாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு ஏழாம் தேதி முதன்முதலாக இந்திய தேசிய கொடி கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் ஸ்கொயர் கட்டிடத்தில் ஏற்றப்பட்டது அந்தக் கொடி பச்சை மஞ்சள் சிவப்பு நிறத்தில் இருந்தது இது பழைய வடிவம் ஆகும்.
பிங்காலி வெங்கையா வடிவமைத்த கொடி காவி நேரம் தியாகத்தையும் தைரியத்தையும் வெள்ளை நிறம் உண்மையையும் பச்சை நிறம் பலத்தையும் குறிப்பதாக அமைந்தது
நமது தேசியக்கொடி என்பது 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது மற்ற நாட்களில் தேசிய கொடி ஏற்றக்கூடாது என்று சட்டம் இருந்தது ஆனால் 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் பொழுது தேசியக்கொடி ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இது மட்டுமல்ல.. பகல் நேரத்தில் மட்டுமே தேசியக் கொடி ஏற்ற வேண்டும் அதன் மீது வேறு எந்த அடையாளங்களும் இருக்கக் கூடாது என்ற உத்தரவும் தற்போது வரை நடைமுறையில் இருக்கிறது.சுதந்திரத்திற்கு பிறகு முதல் தேசிய கொடியை செங்கோட்டையில் பறக்க விட்டவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர் பேசும் பொழுது நமக்கு கிடைத்த சுதந்திரத்தின் அடையாளமாக தேசிய கொடியை பார்க்கக்கூடாது ஒவ்வொருவருக்கும் கிடைத்த சுதந்திரமாக பார்க்க வேண்டும் என்றார்
இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாடு முழுவதும் விடுமுறை விடப்பட்டது அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.இந்தியாவின் தேசப்பிதாவும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன் நின்று வழி நடத்தியவவருமான மகாத்மா காந்தி புதுடெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவை புறக்கணித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அவர் கொல்கத்தாவில் பிரிவினையால் ஏற்பட்ட கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பது முக்கிய தகவலாகும். இதேபோல் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் கவர்னர் ஜெனரல் ஆன மவுண்ட் பேட்டன் பிரபுவும் இந்தியாவில் இருக்கவில்லை மாறாக கராச்சியில் இருந்தார்.சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு இந்தியா என்ன நிலைமையில் இருந்தது தெரியுமா.

அப்போதைய இந்தியாவில் 72 சதவீத மக்கள் விவசாய தொழில் செய்து வந்தனர் 10. 2 சதவீத மக்கள் உற்பத்தி துறையில் இருந்தனர் 17 சதவீத மக்கள்தான் அரசு துறைகளிலும் சேவை துறைகளிலும் வணிகத்துறைகளிலும் வேலை பார்த்து வந்தனர்.நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன.
1947-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே சண்முகம் செட்டியார் நவம்பர் 26 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார் அப்போது இந்தியாவின் வருமானம் 171 கோடியே 15 லட்சம் ரூபாய் ஆக இருந்தது மொத்த செலவினம் 197 கோடியே 29 லட்ச ரூபாய் ஆகும் .மொத்தத்தில் நிதி பற்றாக்குறை 24 மோடியே 59 லட்சம் ரூபாயாக இருந்தது.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இரண்டு மிகப்பெரிய பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி இருந்தது ஒன்று வறுமை இன்னொன்று படிப்பறிவு. 1947 ஆம் ஆண்டு கணக்குப்படி சுதந்திர இந்தியாவில் 16 சதவீத மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்களாக இருந்தார்கள்.இப்படிப்பட்ட இந்தியா தான் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களாக தீட்டப்பட்டு மெது மெதுவாக வளர்ந்து இன்று பிரதமர் மோடி தலைமையில் உலகம் பாராட்டும் தேசமாக இந்தியா மிகப்பெரிய வெற்றிக்கனியை எட்டிப் பிடித்துள்ளது.இன்றைய இந்தியா அமெரிக்கா சீனா ரஷ்யா உள்ளிட்ட முன்னணி நாடுகளுக்கு போட்டியாக… பொருளாதார ரீதியில் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடாக… உருவெடுத்து நிற்கிறது.
இன்னும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் நமது இந்தியாவை உலகின் வலிமையான நம்பர் ஒன் தேசமாக மாற்றுவோம் என்று இந்த நாளில் சபதம் ஏற்போம்!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களுடன் உங்கள் ஜெம் தொலைக்காட்சி
செய்தி தொகுப்பு : திரு.போஸ்
Advertisements



