Khelo India Youth Games 2024: முதல் வெற்றியை பதிவு செய்த தமிழ்நாடு கபடி அணி!

Advertisements

சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா கபடி போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

18 வயதிற்கு உட்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கும் ஆறாவது கேலோ இந்தியா  விளையாட்டு போட்டியினை ஜனவரி 19 ஆம் தேதி அன்று நேரு விளையாட்டு அரங்கில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன்படி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

கபடி மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி தன்னை எதிர்த்து விளையாடிய தெலுங்கானா அணியை 78 க்கு 13 என்ற புள்ளிக் கணக்கில் 65 புள்ளிகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் இமாச்சல் பிரதேஷ் அணியும் மேற்குவங்க அணியும் மோதின இதில்  இமாச்சலப் பிரதேச அணி 62 க்கு 14 என்ற  புள்ளிக் கணக்கில் 48 புள்ளிகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. பீகார் மற்றும் சண்டிகர் அணிகள் மோதிய போட்டியில் பீகார் அணி 35 க்கு 22 என்ற புள்ளி கணக்கில் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய போட்டியில் 45க்கு 40 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆடவர் கபடி பிரிவில் தமிழ்நாடு அணி தன்னை எதிர்த்து விளையாடிய சண்டிகர் அணியை 46 க்கு 31 என்ற புள்ளிக் கணக்கில் 15 புள்ளிகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மத்திய பிரதேசம் பீகார் அணிகள் மோதின இதில் 36 க்கு 26 என்ற புள்ளிக் கணக்கில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது.  ராஜஸ்தான் மகாராஷ்டிரா அணிகள் மோதிய போட்டியில் 34 க்கு 28 என்ற புள்ளி கணக்கில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.  மற்றொரு போட்டியில் ஹரியானா அணி தன்னை எதிர்த்து விளையாடிய டெல்லி அணியை 40க்கு 37 என்ற புள்ளிக் கணக்கில் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *