Income Tax Raid: சென்னையில் மீண்டும் சோதனை!

Advertisements

சென்னையில் தனியார் நிறுவனங்களின் தொடர்புடைய இடங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை: சென்னையில் தனியார் நிறுவனங்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், மந்தைவெளி, புரசைவாக்கம், மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் சோதனை நடக்கிறது.

தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து சோதனை நடக்க வாய்ப்பு உள்ளதால் சோதனை நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *