ஆகஸ்ட் மாதம் அதிமுக செயற்குழு கூட்டம்: எடப்பாடி அதிரடித் தயாரிப்பு!

Advertisements

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என விதி உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் தலைதூக்கியுள்ள நிலையில், அதை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 85 மாவட்டங்கள் இருக்கின்றன. சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி வந்தார். கூட்டத்திற்கு வராதவர்களின் பெயர்களை தனியாக குறித்து வைத்துக்கொண்டார்.

இந்த கூட்டம் கடந்த 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இதேபோல், சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்மொழி தேவன், சுகுமார், ராகேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ளாத அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிருப்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திப்பட்டு, உடன்படாதவர்களை கட்சியைவிட்டு நீக்கிவிட்டு, காலியாகும் கட்சிப் பதவிகளுக்கு, உடனடியாக நிர்வாகிகளையும் நியமிக்க, அடுத்த மாதம் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தையும் கூட்ட எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *