Mannargudi: புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் திறப்பு!

Advertisements

மன்னார்குடியில்  ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் ரூ  1 கோடியே 20 லட்சம்   மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபத்தைக் காணொளி காட்சிமூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது  இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இரண்டு தளங்களுடன் கூடிய  திருமண மண்டபம் ஒன்று சுமார் 6000 சதுர அடி பரப்பளவில் கடந்த 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த மண்டபம் பழுது காரணமாகக் கடந்த 2014 இல் மூடப்பட்டது. இதையடுத்து  திருமண மண்டபத்தைப் புதுப்பித்து  மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனப் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் ஸ்ரீராஜகோபால சுவாமி கோவில் திருமண மண்டபம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் எனக் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது எம்.எல்.ஏ.டி.ஆர்.பி ராஜா உறுதியளித்தார் இதையெடுத்து  ராஜகோபாலசாமி கோவில் திருமண மண்டபம் ரூ 1 கோடியே 20 லட்சம்  மதிப்பில் புதுப்பிக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்புப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டு திருமண மண்டபம்  புதுப்பிக்கும்  பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.  இந்நிலையில் சென்னையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் ரூ 1 கோடியே, 20 லட்சம்   மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபத்தைக் காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்.

திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா, மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக் குழுத் தலைவர் தலையாமங்கலம் பாலு, அறங்காவலர் குழுத் தலைவர் கருடர்  இளவரசன்   உள்ளிட்ட அறநிலையத்துறை  அதிகாரிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்குப் பிரசாதங்களை வழங்கினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *