மேஷம் ராசிக்காரர்களுக்கு பதட்டமான நாளாக இருக்கிறது. நற்பலன்களை பெற ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது. பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி நற்பெயரை எடுப்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. உங்கள் அணைத்து செயல்களையும் புத்திசாலிதமானாகச் செய்ய வேண்டும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி காண முடியும். துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், மேலதிகாரிகளுடன் சில வாக்குவாதங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. துணையுடன் உணச்சிவசப்பட்டு பேசுவீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். மேலும், பண விஷயத்தில் சிறிது கவனம் தேவை. தாயின் உடல் நலத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாள் அல்ல. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது. முக்கியமாக, அணைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது அவசியம். பணியிடத்தில் பொறுமை அவசியம். மேலும், சக பணியார்களிடம் வாக்குவாதங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இனிதான நாளாக இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்கள் பலனளிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெறி பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பூர்வீகச் சொத்துமூலம் பணம் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிரக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காது. மேலும், மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வதன் மூலம் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் தோல், சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் அமைதியாக இருப்பது அவசியம். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். வரவுச் செலவு இரண்டும் இணைந்து காணப்படும். ஆரோக்கியத்தில், சோர்வு, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கப் பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். மேலும், மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டாகும்.பண வரவு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் கவனமுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பணியில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையுடபான் கருத்து வேறுபாடு ஏற்படும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதிக செலவுகளும் ஏற்ப்படும். அதுமட்டுமில்லாமல், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால், பணிகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பதில் கவனமாக இருப்பீர்கள். அதிக செலவுகள் ஏற்ப்படும். இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் பதட்டம் உண்டாகலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்குசற்று மந்தமாக நாளாக இருக்கிறது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால், பணியிடசூழல் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்காது. துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வீட்டிற்காகச் செலவுகள் செய்ய நேரும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்ப்பட வாய்ப்புள்ளது.