Illegal relationship: தலையில் கல்லைப் போட்டுக் கொலை!

மது ஊற்றிக் கொடுத்துத் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கள்ளக்காதலன்!

கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் உறவினரைக் கொன்றுவிட்டு தலைமறைவான நபரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை  தாத்தூர் டேங்க் வீதியில் வசித்து வரும் உன்னிகிருஷ்ணன். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உன்னி கிருஷ்ணனும், அவரது மனைவியும் கடந்த 5 வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே உன்னி கிருஷ்ணனின் மனைவிக்கும், உன்னிகிருஷ்ணனின் உறவினரான சசிக்குமாருக்கும் இடையே கடந்த 3 வருடங்களாகக் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர்கள் சிலர் உன்னிகிருஷ்ணனையும், அவரது மனைவியையும் நேற்று சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் உன்னிகிருஷ்ணனை கொலை செய்யத் திட்டம் தீட்டி உள்ளார்.

அதன் அடிப்படையில் உன்னி கிருஷ்ணனிடம் நட்பாகப் பேசி மது அருந்தலாம் என்று கூறி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவருக்கு அதிக அளவில் மது ஊற்றிக் கொடுத்து மயக்கமடைந்த உன்னி கிருஷ்ணனின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு சசிகுமார் தலைமறைவான நிலையில் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சசிகுமாரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *