“Selfie எடுத்தால் prize உண்டு” – பள்ளிக்கல்வித்துறை!

Advertisements

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறறை அறிவிப்பு.

நமக்கெல்லாம் திருவள்ளுவர் சிலைன்னு சொன்னாலே கன்னியாகுமரில 133 அடிக்கு உயர்ந்திருக்கிற அந்தத் திருவள்ளுவர் சிலை தான் ஞாபகம் வரும். அந்தச் சிலையை நிறுவி இந்த வருஷத்தோட 25 வருஷம் ஆகுது. அந்தத் திருவள்ளுவர் சிலையோட வெள்ளி விழாவைக் கொண்டாட தமிழக அரசு தயாராகிட்டு வருது. இந்த நிலைல தான் பள்ளிக்கல்வி துறை சார்பாகத் திருக்குறள் சம்பந்தமான போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி:

பிரிவு-1 : 6 வயது வரையிலானவர்களுக்கு ஒரு அதிகாரம்
பிரிவு-2 : 7 முதல் 10 வயது வரையிலானவர்களுக்கு 3 அதிகாரங்கள்
பிரிவு-3 : 8 முதல் 14 வயது வரையிலானவர்களுக்கு 5 அதிகாரங்கள் என
மூன்று பிரிவினரும் திருக்குறளை ஒப்புவித்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

கட்டுரை போட்டி:

கட்டுரை போட்டிக்கு 14 முதல் 17 வயதில் இருக்கு குழந்தைகள் பங்கேற்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. கற்றலின் மேன்மைக் குறித்து திருக்குறள்.
2. அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு இரு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரைகளைத் தட்டச்சுச் செய்து PDF கோப்பாக அனுப்ப வேண்டும்.

ஓவிய போட்டி:

பிரிவு-1 : அனைத்துப் பிரிவினர் திருக்குறளில், ஏதேனும் ஒரு குறளைக் கருப்பொருளாகக் கொண்டு(content) ஓவியங்கள் அமைய வேண்டும். அல்லது திருக்குறளின் நன்மைகள்குறித்து ஓவியங்கள் அமையலாம்.
பிரிவு- 2 : 1ம் வகுப்பு முதல் 5 வரையிலானவர்கள் திருவள்ளுவர் படத்தை ஓவியமாகத் தீட்ட வேண்டும். இரு பிரிவினரும் வரைந்த ஓவியங்களைப் புகைப்படங்களாக எடுத்து அனுப்ப வேண்டும்.

குறும்பட போட்டி:

இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 17 முதல் 21 வயதுக்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும். குறும்படத்தின் மையக்கருத்து திருக்குறள் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும். படைப்புகளை mp4 format- ல் அனுப்ப வேண்டும்.

செல்பி போட்டி:

பொது இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலை அல்லது திருக்குறள் எழுதிய சுவர்களில் முன்பு செல்பி எடுத்துப் புகைப்படத்தை அனுப்பும் செல்பி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிதை போட்டி:

இந்தப் போட்டிக்கு வயதுவரம்பு கிடையாது. யார் வேணாலும் எழுதலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும்  போட்டியில் கலந்து கொள்ள விருப்பமானவர்கள் உங்களுடைய படைப்புகளை Video, Photo, document pdf வடிவில் tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்கக் கடைசி தேதி டிசம்பர் 18 ஆகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *