‘மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக்கூடாது’ – பிரதமர் மோடி.!

Advertisements

மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக்கூடாது என்று, இஸ்ரேலில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பின்பேரில், பிரதமர் நரேந்திரமோடி இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக, இஸ்ரேல் சென்றுள்ளார்.

இந்நிலையில் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய பிரதமர் நரேந்திரமோடி,  இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக்கூடாது. காசா அமைதித் திட்டத்தின் மூலம் அமைதிக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரித்துள்ளது என்றும், எதிர்காலத்திலும், அனைத்து நாடுகளுடனும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்வோம் என்றும் தெரிவித்த அவர், அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலையும் கண்டித்தார்.

நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால், அங்கீகரிக்கப்பட்ட காசா, அமைதி முயற்சியின் ஒரு பாதையை வழங்குகிறது என்றும், இந்த முயற்சிக்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்றும், பாலஸ்தீன பிரச்சினையை நிவர்த்தி செய்வது உட்பட, பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான வாக்குறுதியை அது கொண்டுள்ளது என நாங்கள் நம்புகிறோம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *