ஒரே இரவில் மில்லியனர் ஆன பாகிஸ்தான் மீனவர்! அரிய வகை மீன் அள்ளித்தந்த அதிசயம்..
பாகிஸ்தான் இப்ரஹிம் ஹைதேரி மீனவ கிராமத்தில் வசித்து வரும் ஹாஜி பலோக் மற்றும் அவருடன் பணி புரியும் மற்றவர்களுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது சோவா என்று அழைக்கப்படும் தங்க மீன் அவர்களுடைய வலையில் சிக்கியுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரத்தில் ஒரே இரவில் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் பிடித்த அரிய வகை மீன் பலவகையான மருத்துவ குணங்களுக்கு பயன்படுவதாக கூறப்படுகிறது.
அவர் பிடித்த அந்த அரிய வகை மீன் 70 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. கராச்சி துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வலையில் சிக்கிய மீன்கள் இருந்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த முபாரக் கான் என்பவர் கூறியுள்ளார்.
கலாச்சார மற்றும் மரபு வழியாக வழிபடும் மீன் மற்றும் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தபடுவதாக தெரிவித்துள்ளார். எங்கல் வாழ்வில் அடித்த அதிர்ஷ்டக் காற்று என்று அது எங்கள் மேல் விழுந்துள்ளது. இந்த 70 மில்லியன் பணமானது எங்கள் குழுவில் இடம் பெற்ற அனைவரூக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அந்த வகை அரிய மீன் முட்டை இடும் பருவங்களில் மட்டும் கரையோரங்களில் வரும் என்று தெரிவித்துள்ளார்.