2023 Cricket World Cup: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

தென்னாப்பிரிக்கா அணி வெற்றி.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி உற்சாகமாகத் தொடங்கியது.  நவம்பர் 19ம் தேதிவரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இன்று  உலகக்கோப்பையின் மூன்றாவது லீக் போட்டியில்ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேச அணி எதிர்கொண்டது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில்  பந்துவீச்சை தேர்வு செய்தது.அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி, 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதனைத் தொடர்ந்து156ரன்களை இலக்காக எடுத்தால்  வெற்றி  என்று விளையாடிய வங்கதேசம் அணி வீரர்கள்அதிரடியாக விளையாடினர்.   35 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து  156ரன்களை எடுத்து வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது நடந்த  ஆட்டத்தில் இலங்கை – தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தின. மதியம் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடினர்.இதில் அதிரடியாக விளையாடிய டி காக், டசன், மார்கரம் ஆகிய மூன்று வீரர்களும் சதம் அடித்தனர். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை எடுத்தது.அதனைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 44.5  ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளை இழந்து 326  ரன்களை எடுத்தது தோல்வியைத் தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *