வீதியில் பிரசவித்த பெண்.. விரைந்து வந்து உதவிய போலீசார்!
மகாராஷ்டிர மாநிலம் , குர்லா பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த 30 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென்று பிரசவ் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது வீதியிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப் பெண் மற்றும் குழந்தையை மீட்டு பிஹர் மும்பை நகராட்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தை பெற்ற பெண்ணின் பெயர் சுவர்னா மிர்கல். நிர்பயா அமைப்பை சேர்ந்த பெண்கள் விரைந்து வந்து தாய்க்கும் சேய்க்கும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். காவல்துறையின் மனிதாபிமான செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.