நான் பெரியாரை ஏற்க மாட்டேன் – சீமான்!

Advertisements

தமிழ் நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதிக்குச் சமீபத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இடைத்தேர்தல் குறித்த அறிவப்பு வெளியான சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பெரியார்குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

இதனால் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பொது மக்கள் எனப் பலரும் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே சீமான் பெரியர் குறித்து தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தது, நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதனால், தமிழ் நாடு முழுக்க நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகினர். சிலர் மற்ற கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பலர் விலகி வருவதை அடுத்து, பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் வைத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து பேசும்போது, “பெரியாரைத் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்க முடியாது.

பெரியாரை ஏற்றுக் கொள்ளக்கூடிய தம்பிகள் என்னைவிட்டும், நாம் தமிழர் கட்சியை விட்டும் வெளியேறலாம்,” என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *