இந்தியா- அமெரிக்கா நட்புறவு உலக அளவில் பெரும் சக்தியாக உருவெடுக்கும்.. நரேந்திர மோடி இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு!
புதுடெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான ‘2 +2’ அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருக்கு விருந்தளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவுகளை மேம்படுத்துவதற்கான திறவுகோல் ‘2 +2’ உரையாடல் என்று பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
“@SecBlinken மற்றும் @SecDef கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய சுமுகமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த “2 +2” சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இருதரப்பு கூட்டாண்மையை “உலகளாவிய நன்மைக்கான சக்தி” என்று விவரித்த அவர், “ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் நாங்கள் முன்னெடுத்துள்ள முயற்சிகள் ஒரு நல்ல நம்பிக்கையாகும். இது பல்வேறு துறைகளில் எங்கள் பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-அமெரிக்கா கூட்டணி உண்மையிலேயே உலகளாவிய நன்மைக்கான ஒரு சக்தியாகும்.
முன்னதாக, ‘2+2’ பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்து இரு தரப்பினரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.