சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன்..பிரதமர் மோடி..!

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி சோழபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார் மோடி. சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன் என்றும், அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும் மோடி கூறினார்.

தொடர்ந்து நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கு ஓய்வு எடுத்துவிட்டு இன்று கங்கை கொண்ட சோழபுரம் வந்தார்.சோழபுரம் வரும்போது 3.8 கிமீ தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார்.இதற்கு பிறகு சோழபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்ட ராஜேந்திர சோழன் கண்காட்சியில் கல்வெட்டுகளை பார்வையிட்டார். கோவில் வளாகத்தில் உள்ள சிற்பங்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதனை தொடர்ந்து ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார் மோடி. சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன் என்றும், அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும் மோடி கூறினார்..

பிரதமர் மோடி கூறியதாவது:- வணக்கம் சோழ மண்டலம்.. நமச்சிவாய வாழ்க.. நாதன் தாழ் வாழ்க.. இளையராஜாவின் இசை ஓர் ஆன்மிக அனுபவம்.. இது ராஜராஜ சோழனின் மண், காசியின் பிரதிநிதியான சிவ ஹோசம் புல்லரிப்பை தருகின்றது. இந்தியாவின் 140 கோடி மக்களுக்காகவும் இன்று பிரார்த்தனை செய்துள்ளேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன். அனைவரும் இந்த கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *