விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது!

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘லவ் மேரேஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகச் சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் போன்ற பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
திருமணம் தாமதமாவதால் ஒருவர் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றிய கதையை இந்தப் படம் விவரிக்கிறது என இயக்குநர் சண்முக பிரியன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *