பிரதமருக்கு இசை வடிவில் SURPRISE .. ஜி.வி பிரகாஷ் பெருமிதம்..!

Advertisements

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஏழைத்தாயின் மகன் என்னும் பெயரிலான பாட்டை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பின்னணியில் பிரதமர் மோடியும் அவரை வரவேற்கும் மக்களும் எனப் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்தப் பாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தப் பாடலைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைப்பாளராகவும் பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு மக்களின் சார்பாக இந்த அன்புப் பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *