ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு என்று ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தில்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பழனிச்சாமி சந்தித்து வந்தது குறித்துத் திமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது செந்தில்பாலாஜியும் அவர் தம்பியும் கொள்ளை கடத்தல் எனக் கரூரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ஸ்டாலின் விமர்சித்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இப்போது செந்தில் பாலாஜி புனிதராகி விட்டாரா? என்றும், அன்று ஊழல்வாதி எனக் கூறிய அவருக்கு இன்று அமைச்சர் பதவி கொடுத்தது எப்படி என்றும் எடப்பாடி பழனிச்சாமி வினவியுள்ளார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது அவருக்குக் கருப்புக்கொடி காட்டியதாகவும், அதே ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் சென்னைக்கு வரும் பிரதமருக்கு வெள்ளைக்கொடி காட்டியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு என்று ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.