மனிதனை செயற்கையாக உருவாக்கும் விஞ்ஞானிகள்: உலக அதிசயம்..! சுவாரசியமான பின்னணி ..!

Advertisements
மனிதனை ஏன் செயற்கையாக உருவாக்க முடியாது என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ள தகவல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கணவன் மனைவி இணை சேர்ந்து அதன் மூலம் குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகி மனிதனாகிறான். அப்படிப்பட்ட மனிதனை ஏன் செயற்கையாக உருவாக்க முடியாது என்ற கேள்வி விஞ்ஞானிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது
தற்பொழுது இதற்கு விடை காணும் வகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள் . இது தொடர்பாக உலகின் மிகப்பெரிய மருத்துவ தொண்டு நிறுவனமான வெல்கம் டிரஸ்ட் 100 லட்சம் யூரோ பணங்களை வழங்கி உள்ளது . மனித உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் டிஎன்ஏ எனப்படும் ஒரு மூலப் பொருள் உள்ளது இந்த மூலக்கூறு தான் மனிதனை இயக்குகிறது . அப்படிப்பட்ட டிஎன்ஏ மூலக்கூறை வரைபடம் ஆக்கிய நிலையில் ஏன் செயற்கையாக மனிதனை உருவாக்க முடியாது என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்
செயற்கை மனித ஜினோம் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சியில் செயற்கையாக மனித குரோமோ சோமை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதன் மூலம் செயற்கை மனிதன் உருவானால் அவனது அழகு, ஆரோக்கியம், குணம் எல்லாவற்றையும் விஞ்ஞானிகளாலேயே பதிவு செய்து விட முடியும் என்பது உலகின் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாகும் . இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கும் பொழுது செயற்கை மனிதன் உருவானால் அவனுக்கு ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோய்களையும் மருத்துவ முறையில் எளிதாக சரி செய்து விட முடியும் ஒரு வேளை மரணத்தை கூட வெல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்
மேலும் இந்தத் திட்டம் மருத்துவர் ரீதியில் நன்மையான இலக்கு வைத்து செய்யப்படுகிறது தவறாக எந்த வழிமுறையும் கையாளப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . இதில் முதல் கட்டமாக செயற்கை மனித குரோமோசோம்களை உருவாக்குவதற்கான செயல்முறை ஒன்றை தற்பொழுது விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர் . இருந்தபோதிலும் இந்த ஆராய்ச்சி முடிவதற்கு நீண்ட காலமாகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *