Jyothi Nirmalasamy: புதிய தோ்தல் ஆணையர் நியமனம்!

Advertisements

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றதையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழனிகுமார் ஓய்வு பெற்றதையெடுத்தை பத்திரப்பதிவுத்துறை செயலராக இருந்த ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 8) பணி நிறைவு பெற்றார்.தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.பழனிகுமாா், 2021-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் பணிக்காலத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் அதே பதவியில் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டாா். அவரது, நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் வரும் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) நிறைவடைகிறது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பணி நாளான வெள்ளிக்கிழமையுடன் பணி நிறைவு பெற்றார்.

மாநில தலைமை தேர்தல் ஆணையம்இதையடுத்து, புதிய தோ்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *