இளய தளபதி தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து ஆளுங்கட்சி மீது கடுப்பாகி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். முதல்வர் குறித்தும் அவர் தனிப்பட்ட முறையில் பேசுவது எரிமலை தீ பிழம்பை கக்குவது போல் தவெகவினர் அவரை கடுமையாக கண்ட கண்ட வார்த்தையில் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் இபிஎஸ் மீண்டும் முதல்வராக அமர்வார் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ள கருத்து உலகளாவிய கவனம் பெற்று கொண்டிருக்கிறது.தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தங்களது கருத்துக்களை தினம் தினம் சேவல் கூவுவதுபோல் கூவி வருகிறார்கள்.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 2029 தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
தவெக ஆட்சி அமைத்ததற்கு பின்பாக ஆளுங்கட்சியை நோக்கி அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் சென்று விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கூட தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகி விட்டனர். இதனிடையில் முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், இபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இவர் ஆளுங்கட்சியான தவெகவை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக முதல்வர் பற்றியும் விமர்சித்து வரும் நிலையில், ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக தவெகவினர் புகார் அளித்து வருகின்றனர். இப்படியான நிலையில் 2029 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கை காட்டுபவரே பிரதமராக வருதற்கு மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.
அதே தேர்தலுடன் ஒரே நாடு ஒரே தேர்தலோடு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக அமர்வார் என கருத்து தெரிவித்துள்ளார் ஆர்.பி. உதயகுமார். அவருடைய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கின்றன. தவெக ஆட்சி 2031 வரை ஐந்தாண்டுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலின் 2029 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் கணக்கு போடுகின்றன.
இதன் அடிப்படையிலே தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற கருத்தையும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றன. 2029 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் போது, தமிழ்நாட்டிலும் சட்டமன்ற தேர்தலும் நடக்கும் என்பது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எண்ணமாக உள்ளது. இதனையடுத்து அதனை நோக்கியே காய்கள் நகர்த்தி வருகின்றன. இதனிடையில் ஒரே நாடு ஒரே தேர்தலுடன் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ் முதல்வராக அமர்வார் என ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.
மற்றொரு பக்கம் சிஎம் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக கட்சியை சார்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக பேசி கொண்டிருக்கிறார்கள். இதனை நோக்கி தவெக வேலை செய்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் முதல்வர் மீது காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் எடப்பாடி பழனிசாமி கை காட்டுபவரே பிரதமராக அமர்வார் என ஆர்.பி. உதயகுமார் தற்போது கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று மக்களுக்கு நல்ல நல்ல நடந்தேரிட குரலற்றவர்களின் குரலாக விளங்கும் நம் ஜெம் தொலைக்காட்சியுடன் எப்போதும் இணைப்பில் இருங்கள்..

