
ஈஷா சார்பில் தமிழகத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிவரை, 15 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 42 இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளைமூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் ‘ஷாம்பவி மஹா முத்ரா’ எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த யோகப் பயிற்சி மக்களின் உள்நிலை நல்வாழ்விற்காக, தொன்மையான யோக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்தக் குறிப்பிட்ட ஈஷா யோகா பயிற்சிமூலம் பல்வேறு உடல் மற்றும் மன நலன்களைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சென்னை, கோவை, சேலம், கடலூர், பாண்டிச்சேரி, திருச்சியெனத் தமிழகம் முழுவதிலும் 42 இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. இவ்வகுப்புகள் காலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை அல்லது மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரையெனத் தினசரி இரண்டு வேளையாக இவை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு வகுப்பினை தேர்ந்தெடுத்து பங்கு பெறலாம். மேலும் இதில் பங்கேற்க பதிவுச் செய்தவர்களுக்கு நவம்பர் 19 அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரையில் இந்த வகுப்பில் பங்குபெறுவதற்கான வழிகாட்டுதல் அமர்வு நடைபெறும்.


