Holidays In Puducherry: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Advertisements

புயல் எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,  காரைக்கால்,  ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் என்றும் அது திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாயன்று காலைத் தெற்கு ஆந்திரம் வடதமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் 4-ம் தேதி புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை காலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *