Sabarmati – Agra Train Accident: சபர்மதி – ஆக்ரா விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து!

Advertisements

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சபர்மதி- ஆக்ரா விரைவு ரெயில்திடீரெனத் தடம் புரண்டது. ரெயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.

குஜராத் மாநிலத்திலிருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சபர்மதி- ஆக்ரா விரைவு ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயில், நள்ளிரவு ஒரு மணி அளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரெனத் தடம் புரண்டது. ரெயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லையென வடமேற்கு ரெயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.

டெல்லி நோக்கிச் செல்லும், டெல்லியிலிருந்து வரும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்து. உத்தர பிரதேசம் நோக்கிச் செல்லும் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

ரெயிலில் பயணம் செய்தவர்கள்குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஆறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *