இந்தியும் தமிழும் எங்கள் உயிர் – திமுக வேட்பாளர் சந்திரகுமார்!

Advertisements

ஈரோடு: 

தேர்தல் பிரச்சாரத்தில் ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ‘இந்தியும் தமிழும்தான் எங்கள் உயிர்’ என்று தவறுதலாகச் சொன்ன சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரிடம், இந்தி நோட்டீஸ் குறித்து கேள்வி எழுப்பியபோது, “திமுகவின் கொள்கை இரு மொழி கொள்கை தான்.

அந்த இரு மொழிகள், ஆங்கிலமும் தமிழும்தான். திமுக எந்தக் காலகட்டத்திலும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். லக்கி கோத்தாரி என்பவர் வட இந்தியாவை சேர்ந்தவர்.

அவர் பல வருடங்களாகத் திமுகவில் இணைந்து பயணித்து வருகிறார். அவர் இங்கு வாழும் இந்தி பேசும் மக்களிடம் அழைத்துச் சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

அப்போது தமிழில் நோட்டீஸ் கொடுத்தால் நாங்கள் எப்படி படிப்பது என்று சிலர் கேட்டுள்ளார்கள். இதனால் லக்கி கோத்தாரி, தனிப்பட்ட முறையில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கி உள்ளார்.

திமுக, அதிமுக உள்ள அனைத்துக் கட்சிகளும் இங்கு வட இந்தியர்கள் வாழும் இந்திரா நகர் பகுதியில் இந்தி நோட்டீஸ் கொடுப்பது வாடிக்கையான ஒன்று தான். இதைத் தற்போது பெரிதாக்குகிறார்கள். இது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல” என்றார்.

தொடர்ந்து சந்திரகுமார் பேசும்போது, “திமுகவின் இரு மொழிக் கொள்கை என்றைக்கும் இருக்கும், இந்தியும் தமிழும்தான் எங்கள் உயிர்’ என்றார். இதனால் அங்கே சலசலப்பு எழுந்தது.

உடனே சுதாரித்த அவர், “சாரி தவறாகச் சொல்லிவிட்டேன் எனத் தெரிவித்து, மீண்டும் இந்தியெனக் குறிப்பிட்டார். அதன்பின்னர், “தமிழும் ஆங்கிலமும்தான் உயிர்” என்று சொன்னார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *