தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை குறித்து பேச தொடங்கிய முதல்வர் விஜய்.!

தமிழக சட்டப்பேரவை மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த துறைகள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய், உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து உரையாற்ற இருக்கிறார்.

குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்தவகையில், முதலமைச்சர் விஜய் என்ன மாதிரியான பதிலை சொல்லப்போகிறார்? என்றும், இந்த துறைகளுக்கான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுவிட்ட நிலையில், மேலும் புதிய அறிவிப்புகளை எதுவும் வெளியிடுவாரா? என்றும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து வனத்துறை, வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *