ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட இந்து முன்னணி – ஐகோர்ட் மறுப்பு!

Advertisements

மதுரை:

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

இந்தநிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.

இப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதி தனபால் முன்பு அவசர முறையீடு செய்தனர். அப்போது நீதிபதி, இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது.

வழக்கறிஞர் மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *